.

.

Monday, November 3, 2014

கல்கண்டு சினிமா விமர்சனம்!!!

3rd of November 2014
சென்னை:நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் 'கல்கண்டு'.

வாத்தியார் அப்பா ஒருவர், தனது இரண்டு மகன்களையும் டாக்டராக்கி, ஒருவரை அமெரிக்காவுக்கும், ஒருவரை லண்டனுக்கும் அனுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவருடைய ஆசைப்படி மூத்த மகன் டாக்டராகி, அமெரிக்காவில் பணியாற்றுகிறார். ஆனால் இளைய மகனும் படத்தின் நாயகனுமான கஜேஷ், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்.

மதிப்பெண் குறைவு என்று தெரிந்தால் தனது வாத்தியார் அப்பா, தோலை உறித்து விடுவாரே என்ற பயத்தில் இருக்கும் கஜேஷுக்கு, அவருடைய அண்ணனான  அகில், பணம் கொடுத்து டாக்டர் சீட் வாங்க எற்பாடு செய்கிறார். அதன்படி அமைச்சர் ஒருவரிடம் தனது பெயரையும், அப்ளிகேஷன் நம்பரையும் கஜேஷ் எழுதி கொடுக்க, அதில் எற்படும் தவறுதலால், கஜேஷுக்கு கிடைக்க வேண்டிய டாக்டர் சீட் வேறு ஒருவருக்கு கிடைத்து விடுகிறது.

இதனால் டாக்டர் சீட்டும் இல்லாமல், கொடுத்த பணத்தையும் திரும்ப பெற முடியாமல், தனது குடும்பத்தாரிடம் தான் டாக்டருக்கு படிப்பதாக பொய் சொல்லி, சென்னையில் காலத்தை கடத்தும் கஜேஷுக்கு அவருடைய நண்பர்கள், உனது பணத்தில் டாக்டருக்கு படிப்பவரிடம், பணத்தை திருப்பி கேட்கலாம், என்று யோசனை சொல்கிறார்கள். அதன்படி தனது இடத்தில் இருப்பவரை தேடிச் செல்லும் கஜேஷ், அந்த இடத்தில் நாயகி டிம்பிள் சோப்டே தான் படிக்கிறார் என்பதை தெரிந்துக்கொள்கிறார். ஆனால், அவரிடம் பணத்தைக் கேட்பதற்கு பதிலாக, காதலை கேட்க, அந்த காதல் அவருக்கு கிடைத்ததா? கஜேஷ் டாக்டர் இல்லை என்ற உண்மை அவருடைய குடும்பத்தாருக்கு தெரிந்ததா? என்பதை காதல் பிளஸ் கமெடி என்ற ரீதியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார்.

நாயகனாக  அறிமுகமாகியுள்ள கஜேஷ், முதல் படம் என்பதால் நடிப்பில் சற்று சறுக்கியிருந்தாலும், நடனத்தில் தனது அப்பா ஆனந்த் பாபுவை நினைவு படுத்தி அசத்துகிறார். தனக்கென்று ஒரு தனி பாணியை நடனத்தில்  கையாண்டுள்ள கஜேஷ், இதை வைத்துக்கொண்டு ஒரு சில படங்களில் சமாளித்தாலும், சற்று நடிப்பிலும் கவனம் செலுத்தினால், கோடம்பாக்கத்தில் நிலைத்து நிற்கலாம்.

கவர்ச்சி நாயகியான டிம்பிள் சோப்டே, இப்படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று நிருபித்துள்ளார்.

கஞ்சா கருப்பு, சாமிநாதன், மயில்சாமி ஆகியோரது கூட்டணி காமெடி திரையரங்கையே அதிரவைக்கிறது.

நாயகனின் அப்பாவாக நடித்துள்ள முத்துராமன், நாயகனின் அண்ணனாக நடித்துள்ள அகில், டி.பி.கஜேந்திரன்

கே.வி.சுரேஷின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டையும் மீறி, ரொம்ப அழகாக காட்சிகளை படமாக்கியிருப்பதுடன், நாயகன், நாயகியையும் அழகாக காட்டியிருக்கிறது.

படத்திற்கு கூடுதல் பலம் என்று சொன்னால் அது இசை என்று சொல்லலாம். அந்த இசையைக் கொடுத்திருப்பவர் கண்ணன். தமிழ்ப் படம் படத்திற்குப் பிறகு கண்ணனின் பெயர் பிரபலமாகும் அளவுக்கு பாடல்கள் அத்தனையும் திரும்ப திரும்ப கேட்கவும், முணுமுணுக்கவும் வைக்கிறது. அதிலும், அந்த கானா பாட்டில், வழக்கமாக பாடும் ஒரு நபரை பாட வைக்காமல், மெல்லிய குரல் ஒன்றை ஒலிக்க செய்தது, சபாஷ் போட வைக்கிறது.

காதல்+காமெடி என்று ரெகுலர் சப்ஜெட் கதையாக இருந்தாலும் அதில்  சிறு டிவிஸ்ட்டை வைத்து, சிறப்பான இசையை சேர்த்து  ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார்.
உள்ளிட்ட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment