.

.

Sunday, November 30, 2014

கத்தி பட வழக்கில் ஐகோர்ட் விளாசல்: திரைப்படங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும்!!!

30th of November 2014
சென்னை:நடிகர் விஜய் நடித்த, 'கத்தி' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரங்களிலும் வைத்துக் கொள்ள, பாதுகாப்பு வழங்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள, லைகா தயாரிப்பு நிறுவனம், 'கத்தி' படத்தை தயாரித்தது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படத்தை, வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 'இலங்கை அதிபர் ராஜபக் ஷேவுக்கு நெருக்கமானவர்களால், லைகா தயாரிப்பு நிறுவனம் நடத்தப்படுகிறது; 'கத்தி' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த மாதம், 20ம் தேதி, இரண்டு சினிமா தியேட்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதையடுத்து, படத்தின் பிரின்ட்களிலும், விளம்பரங்களிலும், 'லைகா' பெயரை பயன்படுத்த மாட்டோம் என, நிறுவனம் சார்பில், கடிதம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, படமும் வெளியானது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, உள்துறை செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும், லைகா நிறுவனம் சார்பில், மனு அளிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான், நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட முடியும் என, மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்திலும், லைகா தயாரிப்பு நிறுவனம், மனுத் தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: ஒரு கட்சியின் தலைவருக்கு, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 'நியாயமான கோரிக்கையை ஏற்கிறோம்; உணர்வுகளை மதிக்கிறோம்; படம் மற்றும் விளம்பரங்களில் இருந்து, நிறுவனத்தின் பெயரை நீக்க, ஒப்புக் கொள்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடிதங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க முடியாது. ஒரு படத்தை திரையிட, சென்சார் போர்டு சான்று அளித்து விட்டால், மதம், ஜாதி, இனம், மொழி உணர்வுகளை காரணம் காட்டி, மீண்டும் தணிக்கை செய்ய, எந்த அமைப்பும் கோர முடியாது.

படத்தை வெளியிட சான்றளிக்கப்பட்ட பின், வசனம், காட்சிகள், தலைப்புகளை நீக்கும்படி கோருகிற அமைப்புகளின் நடவடிக்கையானது, 'பிளாக்மெயில்' போன்றதாகும். இத்தகைய மிரட்டல், வெற்றி பெற, அரசு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வெற்றி பெற அனுமதித்தால், சகிப்புதன்மை இல்லாத சிலரிடம், ஆட்சி அதிகாரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், சரண்டர் செய்வதற்கு வழிவகுத்து விடும்.

இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்கள் என, படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகள், அந்த படத்தின் மூலம், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைப்பதை எதிர்க்கவில்லை.

படத்தை மக்கள் பார்ப்பதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் மூலம் அதிக வசூலாகி உள்ளது என, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதன் மூலம், படத்துக்கு, சென்சார் போர்டு அல்லது மக்கள் தரப்பில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை காட்டுகிறது.
எந்த அமைப்பிடம், மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதோ, படத்தை நிராகரிக்கும்படி தமிழக மக்களை, அந்த அமைப்பால் கேட்க முடியவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அகற்றியதால், அந்த அமைப்பும் சந்தோஷப்பட்டு கொண்டது.

எனவே, கொள்கை அடிப்படையில், எதிர்ப்பு இல்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட ஏதுவாக, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்’’என்று உத்தரவிட்டுள்ளார்.

Saturday, November 22, 2014

வன்மம்: திரை விமர்சனம்!!!

22nd of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம்தான் வன்மம்.

ராதா (விஜய் சேதுபதி) செல்லதுரை (கிருஷ்ணா) இருவரும் நண்பர்கள். எப்படிப்பட்ட நண்பர்கள் என்றால் வேலை வெட்டி ஏதும் பார்க்காமல் ஜாலியாக தண்ணியப் போட்டுக்கிட்டு ஊரைச் சுத்துற பார்ட்டிங்க. செல்லதுரைக்கும் அந்த ஏரியா தொழிலதிபர் ரத்னம் தங்கச்சி வதனா (சுனைனா)வுக்கும் செம லவ்வு. இது தெரிஞ்ச ரத்னம் செல்லதுரையை அடிக்கப் போகிறாரு. அப்போ நடக்கிற சண்டையில ரத்னம் கொல்லப்படுகிறார். ரத்னம் கொலைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்துகிற ராதா ரத்னம் குடும்பத்துக்கு சில உதவிகளின் மூலம் ஆறுதலா இருக்கிறாரு. ரத்னத்தின் எதிரி ஜெ.பி.யின் தாக்குதலில் இருந்து ரத்னத்தின் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ராதா. ஒருநாள் செல்லதுரை பேசுகிற பேச்சினால் மனம் உடையும் ராதா அவரது நட்பை தூக்கி எறிகிறார். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

வெள்ளை சட்டையும் வேஷ்டியுமாய் பெரிய மனிதர் தோரணையுடன் படம் முழுக்க வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிக முக்கியமான கேரக்டர் இவருடையதுதான். இவர் நடிப்பினால் அந்த கேரக்டரை தூக்கி நிறுத்துகிறார். கிருஷ்ணா விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறார். ஆடல் பாடலுடன் தொடங்கும் இவர்களது காட்சிகள் இருவரின் நட்பின் இடைவெளிக்குப் பின்னர் வன்மமாய் நகருகின்றன. சுனைனா கொஞ்சம் உதட்டுச் சாயத்தைக் குறைத்தே போட்டிருக்கலாம். குளோஸ் அப் காட்சிகளில் சுனைனா முகத்தைக் காட்டும் போது அவரது உதடு மட்டும் தனித்தே தெரிகிறது…. 

விஜய் சேதுபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்த மனிதர் யார்…? அடேங்கப்பா… என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. ‘உதவி செய்ய போயிதானே இப்படி ஆச்சு…? ஏம்பா நீ தலை குனிஞ்சி நிக்கலாமா?’ என்று விஜய் சேதுபதியின் நாடியை பிடித்து அவர் தலைநிமிர்த்தும் காட்சி செம. அவரே டப்பிங் பேசினாரோ… வேறு யாரும் டப்பிங் பேசினார்களோ… ஆனால் படத்திலேயே குமரி மாவட்டத்து வட்டார வழக்கு மொழியை சரியாக பேசுவதும் இவர் மட்டும்தான். ரத்னம் கார் டிரைவராக வரும் குட்டி மற்றும் இன்னொரு பையனும் நடிப்பில் ரெக்கை கட்டியிருக்கிறார்கள். ஜிவ்வென வேகத்துடன் வரும் ரத்னம் திடீரென கொல்லப்பட்டதும் திரையில் மட்டுமல்ல… திரையரங்கிலும் ஒரு நிசப்தம் நிலவுகிறது. ஜெபி, போஸ் வெங்கட், அம்மா நடிகை சிவரஞ்சனி, முத்துராமன் எல்லோருமே தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான தமிழ் சினிமாக்கள் காட்டிய குமரி மாவட்டத்தின் இடங்களைத் தாண்டியும் சில ஏரியாக்களை பதிவு செய்திருக்கிறது பால பரணியின் கேமிரா. தமனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. ‘பாடட்டா பாடட்டா’ தளாம் போட வைக்கும் பாடல் என்றால் ‘மனமே மனமே’ சோகமான பாடல் என்றாலும் மனதை கவரும் பாடல் இது. படத்தை இயக்கியிருக்கிறார் ஜெய் கிருஷ்ணா. இவர் குமரி மாவட்டத்துக்காரர் என்பதாலேயே இந்த பகுதியை களமாகக் கொண்டு வன்மம் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி சாதாரணமாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ஆக்க்ஷன், கண்கலங்க வைக்கும் காட்சிகள் என்று படம் முழுக்க தேரோட்டியிருக்கிறார் இயக்குநர்.

Friday, November 21, 2014

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது: அமிதாப் வழங்கினார்!!!

21st of November 2014
சென்னை:இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு 2014-ஆம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவாவில் நேற்று  45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அருண் ஜெட்லி விழாவை தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து வழங்க, ரஜினிகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த், மத்திய அரசு வழங்கிய இந்த விருதினை தனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுவதாகவும், தனது வெற்றிக்கு ஆதரவாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன.

Thursday, November 20, 2014

விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்: சரத்குமார் எச்சரிக்கை!!!

20th of November 2014
சென்னை:அவதூறு செய்திகளைப் பரப்பினால், விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார் நடிகர் விஷால். விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இதுவரை பதிலளிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த சரத்குமார் முதன் முறையாக விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். அச்சந்திப்பில் சரத்குமார் பேசியது:

விஷால் தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார் என தெரியவில்லை. இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. முதன் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.

நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் திரைப்பட துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வாடகை வரும்.

மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் ரூ.170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழு கூட்டி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல.

பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா? பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Wednesday, November 19, 2014

Actress Gauthami Nair Latest Photoshoot Gallery!!!

19th of November 2014
சென்னை:Tags : Gauthami Nair New Spicy Stills, Gauthami Nair Actress Latest images, Gauthami Nair New Hot Gallery, Gauthami Nair Unseen Photoshoot, Gauthami Nair Actress New Pictures, Gauthami Nair Latest Photos, Gauthami Nair Hot Pics in Sare.

நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!!!

19th of November 2014
சென்னை:நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.

அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம்.

இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

Tuesday, November 18, 2014

லிங்கா ஆடியோ விழாவில் ரஜினியின் ஓபன் டாக்!!!

18th of November 2014
சென்னை:சூப்பர் ஸ்டாருணா சூப்பர் ஸ்டார்தான் உள்ளதை உள்ளது படியே பேசக்கூடிய நேர்மையான மனிதர்.

லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதாவது , சுமார் இரண்டரை வருடமா எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது, நடிக்கருக்கே சான்ஸ் இல்லா அந்த அளவுக்கு உடல் நிலை சரியில்லை, அதுக்கப்பறம் கோச்சடையான் பட வேலைகளை ஆரபித்தோம் , பாவம் ஒரு சின்ன குழந்த சௌந்தர்யா மேல துக்கி ஒரு பெரிய மலையே வச்சுட்டோம் பாவ அந்த பொன்னு வந்து அவ்வளவு கஷ்டப்பட்டது.

அதற்கு ஒரு காரணம் நானு கூடத்தான் கோச்சடையான் படம் நம்மளுக்கு சினிமான என்ன , மக்கள் என்ன , இண்டஸ்ட்ரி என்ன , பணம் என்ன , டைம் என்ன என்று எல்லாத்தையும் புரியவச்சுருச்சு.
,
கோச்சடையான் படம் எடுக்கும் போது நான் பல படத்துக்கு ரெடியாகிட்டேன் , ஆனா கோச்சடையான் படத்த ரிலிஸ் பண்ணாம, அடுத்த படத்தில் நடிக்க மனசு இல்ல இதைய முதல ரிலிஸ் பண்ணனும் , எப்பமே ஒரு ப்ராபளம் வந்த உடனே அதை முடிச்சுட்டுதான் அடுத்ததுல என்ட்ரி ஆகணும் என ஓபனாக பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Monday, November 17, 2014

Happy Ending Movie Promotions Stills At Mithibai College!!!





17th of November 2014
சென்னை:Tags : Happy Ending Movie Promotions Stills At Mithibai College, Happy Ending Movie Promotions Photos, Happy Ending Movie Promotions Event Gallery

Ten Kings Book Launch by Padma Bhushan Dr.Kamal Haasan Event Stills!!!












17th of November 2014
சென்னை:Tags : Ten Kings Book Launch by Kamal Haasan images, Ten Kings Book Launch Function Photos, Ten Kings Book Launch by Padma Bhushan Kamal Haasan Gallery, Ten Kings Book Release Event Stills, Ten Kings Book Launch Photos, Ten Kings Book Release Pictures.