.

.

Monday, December 29, 2014

Simbu Sings for Movie Saahasam!!!பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக பின்னணி பாடிய சிம்பு!!!

29th of December 2014
சென்னை:The young Turk Simbu crooned the lines written by Karky Vairamuthu *DESI DESI GIRL* for a very special item song of Prashanth with Bollywood actress NargisFakhri & has joined the bandwagon of India's best singers like, teeny boppers heart throb-Anirudh, Shreya Ghoshal, Shankar Mahadevan, Mohit Chauhan, Arjit Singh, Andrea. Earlier the female version was sung by Actor Lakshmi Menon, with this the Album is complete & the Audio launch of movie *SAAHASAM* is planned on a massive scale. The singers of *SAAHASAM*  

Anirudh, Silambarasan, Shankar Mahadevan, Shreya Ghoshal, Mohit Chauhan, Honey Singh, Haricharan, Lakshmi Menon, Andrea & others will perform live on the grand Audio function. The expectation of *SAAHASAM* songs are so high & Actor Thiagarajan is so excited about the outcome of the Music as Thaman has scored outstanding - five seductive foot tapping scintillating numbers. Shankar Mahadevan & Shreya Ghoshal has sung *Pudikkum Pudikkum* Song penned by Kabilan. Lyrics: Karky Vairamuthu, Na.Muthukumar, Kabilan & Yugabharathi.

பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக, முன்னணி நடிகரான சிம்பு (எ) சிலம்பரசன் பின்னணி பாடியுள்ளார். இந்த பாடல், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமன், சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் தமனை தியாகராஜன் பாராட்டினார். 
 
தமன் இசையமைத்த 5 பாடல்களிலும் எது சிறந்த பாடல் என முடிவு செய்வது சிரமமான விஷயம் என ஆச்சரியத்துடன் கூறினார் தியாகராஜன்.
பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Saturday, December 27, 2014

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து!!!

27th of December 2014
சென்னை:நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை, 'ஈராஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'மீடியா ஒன் குளோபல் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்தது.
கடன்:

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக, 'மீடியா ஒன்' நிறுவனம், 'எக்சிம்' வங்கியிடம், 20 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக தெரிகிறது.இந்த கடனை பெறும் போது, ரஜினியின் மனைவி லதா ரஜினியின் பெயரில், சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள சொத்தின் ஆவணங்கள் உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், 'கோச்சடையான்' படம் வெளியாகி விட்ட பின், 'எக்சிம்' வங்கியில் வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் உரிய காலத்தில் செலுத்தவில்லை.இதனால், அந்த கடனுக்கு உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கு உரிய லதா ரஜினியின் சொத்தை உடைமையாக்கிக் கொள்ள, 'எக்சிம்' வங்கி முடிவு செய்தது.
அறிவிப்பு:

இது தொடர்பாக அந்த வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் கடன் கணக்கில், 2014 ஜூலை, 17ம் தேதி நிலவரப்படி, 22 கோடியே, 21 லட்சத்து, 85 ஆயிரத்து, 865 ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. உரிய காலத்தில் இத்தொகை வசூலாகாததால், இதற்கு பிணையாகக் காட்டப்பட்ட, லதா ரஜினியின் பெயரில் உள்ள சொத்தை, வங்கியின் உடைமையாக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.கடந்த, 2002ல் பிறப்பிக்கப்பட்ட பிணைய பத்திரங்கள் மீதான, எட்டாவது வட்டி விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தடை:

இதன்படி, இதில் பிணையமாக அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் சர்வே எண்: 237/3க்கு உட்பட்ட, 26 சென்ட், சர்வே எண்: 237/4க்கு உட்பட்ட, 37 சென்ட், சர்வே எண்: 236/2க்கு உட்பட்ட, 1.50 ஏக்கர் என மொத்தம், 2.13 ஏக்கர் நிலத்தை உடைமையாக்குவதற்கான, 'நோட்டீஸ்' பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. எனவே, இச்சொத்தை அதன் உரிமையாளரான லதா ரஜினிகாந்த் அல்லது வேறு யாரும் விற்பது, வாங்குவது தொடர்பான எந்த நடவடிக்கையிலும் வங்கியின் கவனத்துக்கு வராமல் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில், 'எக்சிம்' வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்தது என்ன?

இந்த அறிவிப்பின் படி, 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உடைமையாக்கப்படும் சொத்தை பொது ஏலத்துக்கு விட்டு, நிலுவைத் தொகையை மீட்க வங்கி நடவடிக்கை எடுக்கும்.
'மீடியா ஒன்' நிறுவனம் விளக்கம்:

இதுகுறித்து, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:'எக்சிம்' வங்கியிடம் எங்கள் நிறுவனத்தின் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையிலேயே, 20 கோடி ரூபாய் கடன் வாங்கினோம்.இந்த தொகையை, 2015 மார்ச், 31ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம். எனவே, இந்த கடனை நாங்களே திருப்பி செலுத்த ஏற்பாடு செய்து வருவதால் உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை வங்கி அணுக வேண்டிஇருக்காது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மாற்றங்கள்...:

'மீடியா ஒன்' நிறுவனத்தின் கடனுக்காக உடைமையாக்கப்படும் இந்த சொத்து தொடர்பாக, இதுவரை நடந்த பரிமாற்றங்கள் குறித்து பதிவுத்துறை வாயிலாக தெரிய வந்த விவரங்கள்:
 
*கடந்த, 2006 ஆகஸ்டில், இந்த நிலங்களை லோகம்மன், ரவி, வேலு, ராஜேஸ்வரி, லதா, கவிதா, பிரேமா, கண்ணன் ஆகியோரிடமிருந்து, லதா ரஜினிகாந்த், ரேணுகா ரவிசங்கர் பெயருக்கு மாற்றப்பட்டது.
 
* இந்த நிலங்கள், லதா ரஜினிகாந்த் பெயரில் இருந்து இந்தியன் வங்கி பெயருக்கு ஒரு கடனுக்காக, 2007ல் மாற்றப்பட்டது.
 
*கடந்த, 2011ல் இந்தியன் வங்கியிடமிருந்து இதற்கான ஆவணம், லதா ரஜினியின் பெயருக்கே வருகிறது.
 
* இதன் பின், 2011ல் லதா ரஜினி பெயரில் இருந்து, 'மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் பெயருக்கு ஆவண ஒப்படைப்பாக மாறுகிறது.
 
*இதில், 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை செலுத்தாததால், இந்த சொத்து, 'எக்சிம்' வங்கியின் உடைமையாகிறது.

Wednesday, December 17, 2014

2015-ம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் ஹன்சிகா!!!

17th of December 2014
சென்னை:அரண்மனை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது:
 
அரண்மனை’ திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்துள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர்.சி சார் எனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க  வேண்டும்' அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.

பொங்கல் அன்று வெளிவரும் 'ஆம்பள' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளேன். நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும்.

டிசம்பரில் வெளிவர இருக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும். அடுத்து வெளிவரும் 'உயிரே' படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன்.

அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும் 'வாலு' எனக்கு மிக பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய் சாருடன், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன்.

சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர். கடின உழைப்புடன் விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்’ என்றார்.

வருகிற 2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கின்றனர் திரை துறையினர். தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் பெற்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

Saturday, December 13, 2014

'உலக சூப்பர் ஸ்டார்' ரஜினி பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்; ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

13th of December 2014
சென்னை: இன்று டிசம்பர் 12-ம் தேதி 'உலக சூப்பர் ஸ்டார்' என ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் பிறந்த நாள்.

அவர் நடித்த மெகா படமான லிங்காவின் வெளியீட்டு நாளும் அதுவே. எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இரட்டை சந்தோஷமல்லவா! அவர்களின் இந்த சந்தோஷம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது, கடந்த சில வாரங்களாக.

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், லிங்கா பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்து ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகள், தங்கத் தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் அத்தகனை பெரிய கோயில்களிலும் நேற்று மாலையும் இன்றும் தங்கத் தேர் இழுப்பு வைபவம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ரஜினி ரசிகர்களால் உதவிகள் பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும்.

அன்னதானம், இலவச உடைகள், இலவச கல்வி உபகரணங்கள், இலவச மருத்துவ உதவிகள், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தாணம், நிதியுதவி... என தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரஜினியின் அனைத்து மன்றங்களும் உலகெங்கும் இதனைச் செய்து வருகின்றனர். வெறுமனே கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது என்றில்லாமல், முழுக்க முழுக்க மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

லிங்கா ரிலீஸைப் பொறுத்தவரை, அதனை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். படம் வெளியாகும் அத்தனை அரங்குகளும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்றால் மிகையல்ல.
நேற்று நள்ளிரவிலிருந்து லிங்கா சிறப்புக் காட்சிகள் நடை பெறுகின்றன. சென்னைக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், உலகின் மற்ற நாடுகளிலும் லிங்கா வெளியீட்டை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Thursday, December 11, 2014

தமிழகத்தில் 700 தியேட்டர்களில் லிங்கா படம் நாளை ரிலீஸ்!!!

11th of December 2014
சென்னை:லிங்கா’ படம் நாளை ரிலீசாகிறது. இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருக்கிறார்.

‘லிங்கா’ படத்துக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. லிங்கா கதை தங்களுடையது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

ஆனால் ‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று நடந்தன. சிறிது நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது, டிசம்பர் மாதம் பொதுவாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து மந்தமாகவே இருக்கும். இந்த சமயத்தில் ‘லிங்கா’ படம் வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். ஒரு வாரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. அனைத்து தியேட்டர்களும் நாளை முதல் நிரம்பி வழியப்போகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றார்.

உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ வருகிறது. அமெரிக்காவில் 328 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், சிசன், தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, எஸ்கேப், வினஸ், ஸ்ப்ரிக், ஸ்பாட் வேவ், உட்லண்ட்ஸ், சிம்பொனி, ஐநாக்ஸ், ஸ்கிரீன், சாந்தி, சாய்சாந்தி, ஆல்பட், பேபி ஆல்பட், அபிராமி, ஸ்வர்ணசக்தி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, சங்கம், பத்மம், ரூபம், பி.வி.ஆர்., எஸ் 2 பெரம்பூர், கமலா, உதயம், சூரியன், சந்திரன், ஐ.டிரீம்ஸ், மகாராணி, பாரத், சைதைராஜ் போன்ற தியேட்டர்களில் ‘லிங்கா’ படம் திரையிடப்படுகிறது.

காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி ரசிகர்கள் சைதை ஜி.ரவி தலைமையில் ரஜினி பிறந்த நாள் ‘கேக்‘ வெட்டுகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ரஜினி கட்அவுட்கள் வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளது. பேனர்களும் வைத்துள்ளனர்.

நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு காட்சியில் ‘லிங்கா’ படம் பார்க்க தயாராகிறார்கள். நடிகர் தனுஷ் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ‘லிங்கா’ படம் பார்க்க சென்னை வந்துள்ளார்.

முத்தம் என்பது அந்தரங்கமான விஷயம்: நடிகை ஷோபனா!!!

11th of December 2014
சென்னை:முத்தம் என்பது அந்தரங்கமான விஷயம் என்று கூறிய நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா, செய்தியாளர்களிடம் கூறும் போது, “இதனை ஏன் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு அந்தரங்கமான விவகாரம், அந்தரங்கமான விஷயமாகும்.
 
இப்போது இது சரியென நீங்கள் கூறலாம், ஆனாலும், உங்கள் இருதயத்தின் அடியாழத்தில் உங்கள் மகள் இதனைச் செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்” என்றார்.
 
டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் இவரது பரதநாட்டிய புதிய நிகழ்ச்சியை அறிவிக்க ஷோபனா பெங்களூரு வந்தார். "கிஸ் ஆஃப் லவ்" பற்றி அவர் மேலும் கூறும் போது, மக்கள் இந்தப் போராட்டம் பற்றிய உண்மையான கருத்துகளைக் கூற தயங்குகிறார்கள், காரணம் அவர்கள் கூற்று திசைத்திருப்பபடலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றனர் என்றார்.

Wednesday, December 10, 2014

'லிங்கா' படத்துல மூணு ஆச்சர்யங்கள் இருக்கு: சொல்கிறார் ரஜினி!!!

10th of December 2014
சென்னை:லிங்கா படத்தின் தெலுங்குப்பதிப்பு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று (08.12.2014) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குப்பட முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லுஅரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்குப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் லிங்கா படத்தின் கலைஞர்களான ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனி ரத்னா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லிங்கா விழாவில் ரஜினி உரையாற்றினார்:

புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாளுக்கு முன்னாடி நடந்த நிவாரணநிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னாலவரமுடியலை.அப்பஎங்க குடும்பத்துல நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியால வர முடியாமப்போயிடுச்சி.அதுக்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும்.சென்னைக்குப்போன பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னோட நிதியுதவியை வழங்கறேன்.
சுமார் நான்கு வருடங்கள் கழிச்சி நான் நடிச்சிருக்கிற ‘லிங்கா’ படம் வெளிவரப்போகுது. நடுவுல வந்த ‘கோச்சடையான்’ படம் அனிமேட்டட் படம், நேரடியா நான் நடிச்சி வர்ற படம் ‘லிங்கா’.

ஒரு ஆறு மாசத்துக்குள்ள இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய படத்தைக்கொடுக்கிறது நடக்க முடியாத ஒரு விஷயம்.பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய டெக்னீஷயன்கள் பங்கு பெற்றிருக்கிற படம் கறஅர்த்தம்இல்லை.இந்தப்படத்தோட கதை பெருசு, இந்தப்படத்தோட பின்னணி பெருசு. சுதந்திரத்துக்கு முன்னாடி 40கள்ல நடக்கிற கதை.இப்போ நடக்கிற கதை.

ஒரு மிகப்பெரிய அணைகட்டறதைப் பத்தின கதை, டிரெயின் சண்டைக்காட்சிகள், யானைகள், குதிரைகள், ஒரு 60, 70 சீன் படத்துல இருந்தால், அதுல 40 சீன்ல 1000 பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட காலத்துக்குள்ள இந்தப்படத்தை முடிச்சிருக்கோம்னா இயக்குநர் ரவிகுமார், அவரோட யூனிட்மற்றும் தயரிப்பாளர் ஆகியோர் தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை. ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம்.ஆனால், டெக்னீஷியன்ஸ் தான் ரொம்பகஷ்டப்பட்டாங்க.
இந்தப்படத்துல மூணு ஆச்சர்யங்கள் இருக்கு.முதல் ஆச்சர்யம் டெக்னீஷியன்கள்.ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிஸியானவங்க. அது படம் பார்க்கும் போது உங்களுக்குத்தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம். இந்தப்படத்தோட கதை என்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணுபடிச்சேன்.ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் ,அதை நாலு பேரு அவங்ககதைன்னு சொன்னாங்கன்னா, நான் போய் அந்தப்படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப்படத்துல மிகச்சிறப்பான கதை இருக்கு.அந்த நாலு பேரோட கதை இல்லை இது, இந்தப்படத்தோட கதை பொன் குமரனுடையது.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சகதை, இதை மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக்கிடைச்ச பாக்கியம்.
மூணாவது ஆச்சர்யம் என்னன்னா…நான் இந்தப்படத்துல ரொம்பக்கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். அது வந்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சது கிடையாது. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதெல்லாம் கூட கிடையாது. இங்க இருக்கிறவங்களோட டூயட் பாடினது தான் அந்தக்கஷ்டம்.

கேமராமேன் ரத்தினவேலு கூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு.நான் ரஜினிகாந்தை ரொம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்னு சென்னையில நடந்த இசை விழால சொன்னாரு.நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷம் கிட்ட ஆகிடுச்சி.

ஒரு சீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிச்சிக்கொடுத்திருக்கோம்னு சொல்வேன்.ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது.அங்கெல்லாம் ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கயும் சொல்லலாம்.

ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான படம். அது இரண்டு பாகம் எடுக்கிற படம், அதை நான் பார்த்திருக்கேன், அது வேற படம்.இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள்.அவர் இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா வருவாரு.தெலுங்குமக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம்.நான் வெளிப்படையா சொல்றேன், ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரவிகுமார் இந்தப்படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு.ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப்படத்தை எடுக்கக்காரணமா இருந்தாரு. அனுஷ்கா, சோனாக்ஷி, அப்புறம் ஜெகபதி பாபு. திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன்.அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன். இந்தப்படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பாப் பிடிக்கும்.

தமிழ் மக்கள் என் படத்தைப்பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதே மாதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப்படத்துக்கும் அதே மாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன்.தயாரிப்பளார் அல்லு அரவிந்த், அடுத்தபடம் எப்பன்னு கேட்டாரு, கதை இன்னும் ரெடியாகலைன்னு சொன்னேன்.முதல்ல சிரஞ்சீக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்ப நாளா அவர் காத்திட்டிருக்காரு.இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெறும்னு நம்பறேன். நன்றி” என முடித்தார் ரஜினி.

Sunday, December 7, 2014

அனுஷ்காவுக்கும், அஞ்சலிக்கும் இடையே மோதல்!!!

7th of December 2014
சென்னை:குடும்ப பிரச்சனை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திரா பக்கம் போன அஞ்சலி, தற்போது அங்கு அனுஷ்காவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடி
கையாக உள்ள அனுஷ்கா, இரண்டு மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்களுடன், அஜித்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்ட லிங்கா படமும் 12ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் அனுஷ்காவுக்கு வயதாகிவிட்டது. அவர் அனைத்து வேடத்திற்கும் பொருந்த மாட்டார். எனவே அந்த வாய்ப்புகளை எனக்கு தாருங்கள், என்று அஞ்சலி கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால், அஞ்சலிக்கும், அனுஷ்காவும் இடையீ பனி போர் மூண்டுள்ளது. இந்த பனி போர், விரைவில் பெரிய அளவில் வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tuesday, December 2, 2014

நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!!!

2nd of December 2014
சென்னை:கணவன் மனைவியான நடிகை லிஸ்ஸியும், இயக்குனர் பிரியதர்ஷனும் விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்துள்ளனர்.

மலையாள நடிகையான லிஸ்ஸி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனா, இந்த தம்பதியர் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து நடிகை லிஸ்ஸி கூறுகையில், “24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும், பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.

இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.