.

.

Friday, July 31, 2015

புலி இல்லாமல் புலி பட விழா!!!

31st of July 2015
சென்னை:சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'இந்த நிலையில், படம் ஆரம்பித்த நாள் முதல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்த படக்குழுவினர் இன்று சந்திப்பதாக தெரிவித்தனர். என்ன புலி படத்தில் புலியாக நடிக்கும் நாயகன் விஜய், மான்களான ஹன்சிகா, ஸ்ருதி என நடிகர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நடராஜ், கலை இயக்குனர் முத்துராஜ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், கிராபிக் டிசைனர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், "ஒரு நல்ல தருணத்தில் உங்களை சந்திப்பேன் என்று கூறியபடி எங்கள் தயாரிப்பாளர் ஷிபு தமீம் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இவர்களுடன் இணைந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளது.

இதுவரைக்கு நடந்தது எல்லாமே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது, விஜய் சார் என்னையும், ஷிபு அவர்களையும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க சொல்லி அதில் நடிக்க ஒப்புக் கொண்டது. அதேமாதிரி சிம்புதேவன் சார் இந்த மாதிரி ஒரு அற்புதமான கதையை எடுக்க முன்வந்ததும் சரி எங்களால் நம்ப முடியாத ஒரு சந்தோஷமாகவே இருக்கிறது.

புலி படத்துல இதுவரை இணையாத ஒரு நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துக் கொடுத்தது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் என இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் படத்தின் கதைதான். புலி திரைப்படம் இதுவரை விஜய் படத்தில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

ஸ்ரீதேவி மேடம் இந்த படத்துல நடிக்க நாங்கள் அழைத்த போது அவர் தமிழ் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தப்போவதில்லை என்று கூறினார். அதன்பின் போனி கபூரிடம் பேசி ஸ்ரீதேவியை சந்தித்து சிம்புதேவன் கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நான் நடிக்கவில்லையென்றால் அது தவறாகிவிடும் என்று கூறி புலி படக்குழுவுடன் இணைந்தார். அந்தளவுக்கு இந்த படத்தின் கதை இருக்கும்...

அடுத்ததாக புலி படத்துல ஆர்ட் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் இதற்கு கலை இயக்குநர் முத்தையா அவர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மஹதீரா, நான் ஈ படங்களுக்கு கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்த கமல் கண்ணன் இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். புலி படத்தின் கிராஃபிக்ஸ் 6 நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது." என்றார்.

மற்றொரு தயாரிப்பாளர்  ஷிபு தமீம் பேசுகையில், "புலி படத்திற்கான வேலைகள் 2014ம் ஆண்டும் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது, சிம்பு தேவன் படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று செய்தி வெளியான அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் இணையதளங்களின் ஆதரவு என்னால் நம்ப முடியாதளவுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் இளைய தளபதி விஜய் அப்படியில்லையென்றால் ஒருவேளை பி.டி.செல்வகுமார் பத்திரிக்கையாளர்களிடையே வைத்திருக்கும் நல்லுறவாக இருக்கலாம் அதுவும் இல்லையென்றால் சிம்பு தேவன் பத்திரிக்கை துறையிலிருந்து வந்ததால் இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இந்த படத்தில் அவரை ஒளிப்பதிவு செய்ய வைக்கலாமா என்ற சந்தேகத்தில்தான் அவரை அணுகினோம். அவர் அப்போது படங்களில் நடிப்பதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். விஜய் சார் படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு செய்யணும் என்று சொன்னதுமே ஒப்புக் கொண்டார் அவருக்கு நன்றி.

ஸ்ரீதேவி ஏற்கனவே பி.டி.செல்வகுமார் கூறியதுபோல ஆரம்பத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, அவரது கணவர் போனி கபூரை அலைபேசியில் அழைத்து அவரிடம் பேசி அதன்பின் ஸ்ரீதேவியை சந்தித்து கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதுவரை புலி படத்துக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு என் நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை என்று விரும்பி வேண்டிக் கொள்கிறேன்." என்றார்.

ஒளிப்பதிவாளர் நடராஜ் பேசுகையில், "துப்பாக்கி படத்துல நான் ஒரு பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தேன் அப்போதே விஜய் சார் என்னை அழைத்து கூடிய விரைவில் ஒரு புதுமையான கதையம்சத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன் அந்த படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு என்று கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.

அதன்பின் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து இயக்குநர் சிம்புதேவனிடம் கதையை கேட்க சொன்னார் நானும் கதையை கேட்டபின் இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் புலி திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர்களை பற்றி நான் கூறியாக வேண்டும் 2015ம் ஆண்டு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது புலி படம்தான். எனக்கு என்ன சாதனங்கள் வேண்டுமென்றாலும் அதனை உடனே வரவழைத்து கொடுத்தார்கள். 140 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தது எந்தவொரு நாளும் யார் என்ன கேட்கிறார்களோ அது கிடைத்தது, யாருக்கும் இல்லை என்ற பதில் வந்ததேயில்லை. அந்தளவுக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் உறுதுணையாக இருந்தார்கள்.

அதன்பின் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
புலி' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Thursday, July 30, 2015

Actress Nithya menon in Surya ’24’ movie!!!

30th of July 2015
சென்னை:Actress Nitya Menen, act last to act in Director Mani Ratnam’s “O Kadhal Kanmani”, and ‘Kanchana2′. She has paired up with actor Suriya for the first time in upcoming Tamil thriller ’24’, also features Samantha Ruth Prabhu. Actress Nitya menon has been acted important role in the movie of Surya ’24’ movie. Currently the shooting of ’24’ movie in Mumbai,” a source close to the actress told IANS. Actress Samantha and Nithya menon are act in main lead role in the movie of ’24’. Because, Suriya plays dual roles in the film and it’s quite possible that Nitya may be one of the leading role. Being directed by Vikram Kumar, the movie of ’24’ is said to be a racing and thriller film. Oscar winner A.R.Rahman will score the music for the film of ’24’.

ஆர்யா, சந்தானம் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இசை வெளியீட்டு விழா!!!

30th of July 2015
சென்னை:ஆர்யா, சந்தானம் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இசை வெளியீட்டு விழா,

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்திருக்கும்,படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. இந்நேரம் தமிழகத்தில் உள்ள அனைவரும் அதனை பார்த்திருப்பார்கள். டீஸர் முடிவில் பாடல் வருகிறது. 
 
வாசுவும் சரவணனும் 
ஒண்ணா படிச்சவங்க, 
ஊரில் உள்ள பார்களில் எல்லாம் 
சேர்ந்தே குடிச்சவங்க.
 
குடித்தால் போதை வருகிறதோ இல்லையோ. டாஸ்மாக்கை காண்பித்தால் திரையரங்கில் கைத்தட்டல் காதை பிளக்கிறது. பொண்ணாலதான் குடிக்க வந்தேன் என்று தத்துபித்து வசனம் வைத்தால் விசிலடித்தே ஓய்ந்து போகிறார்கள். கைத்தட்டல் கிடைக்கவும், படத்தை ஓட வைக்கவும் இயக்குனர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான் குடி சம்பந்தமான காட்சிகள். 
 
ஆண், பெண் பேதமின்றி மாணவர்களே குடிக்கு அடிமையாகும் காலத்தில் நாம் இருக்கிறோம். ராஜேஷை போன்றவர்கள் அதனை அறுவடை செய்ய ஆவேசத்துடன் காத்திருக்கிறார்கள். தெருவுக்கு தெரு திறந்து வைத்திருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். குறைந்தபட்சம் அதன் எண்ணிக்கையாவது குறைக்க வேண்டும்.
 
குடிக்கு எதிரான மனோநிலையை வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க டீஸர் தீவிரப்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு விஷயமும் அதன் எல்லையை தாண்டும் போதுதான் கண்டிக்கப்படும், தடுக்கப்படும். இந்த டீஸரின் மூலம் எல்லையை கடந்திருக்கிறார் ராஜேஷ். அதற்கான எதிர்விளைவை தணிக்கையின் போது அவர் கண்டிப்பாக எதிர்கொண்டே ஆக வேண்டும்.

Wednesday, July 29, 2015

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்: திரை விமர்சனம்!!!

29th of July 2015
சென்னை:திருட்டு இல்லை, பொய் சொல்லுதல் இல்லை, அடிதடி மோதல் இல்லை, அந்த ஊரில் உள்ள தலைவரிடம், சாக்கடை அடைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், இதோ, என்று அவரே சாக்கடையில் இறங்கி அதை சரி செய்துவிடுகிறார். இத விடுங்க மாமியார் - மருமகள் சண்டை இல்லை என்றால் பாத்துக்குங்க, அந்த ஊர் எப்படிப்பட்ட ஊராக இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த ஊரில் எதற்காக காவல் நிலையம், என்று கருதும் காவல் துறை, அந்த ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தை மூடிவிட்டு, அந்த காவல் நிலையத்தில் இருக்கும் நான்கு போலீசார்களை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்கிறது.

அந்த நான்கு காவலர்களில் ஒருவர் தான் ஹீரோ அருள்நிதி. மற்ற மூவர், சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர்.

திருடனை துரத்துவது, கொலையாளிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வது, ஊர் சண்டையில் அடிபடுவது, என்று  எந்தவிதமான வேலையும் இல்லாமல், போலீஸ் ஸ்டேஷனில் ஜாலியாக கேரம்போடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த போலீஸ்காரர்களை, திடிரென்று போலீஸ் வேலை செய்ய சொன்னால் எப்படி, அதற்காக இந்த நான்கு போலீஸ்காரர்களும் இணைந்து, இந்த ஊரில் நிரந்தரமாக காவல் நிலையத்தை அரசாங்கம் நிறுவ வேண்டும், அதற்காக இந்த ஊரில் தவறு நடக்க வேண்டும், என்று நினைத்து அவர்களாகவே சில சிறு சிறு தவறுகளை, யாருக்கும் தெரியாமல் செய்கிறார்கள்.

அந்த சிறு சிறு தவறுகளால், அமைதியான அந்த ஊரில் எங்கும் நடக்காத அசம்பாவிதங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஊரின் பாதுகாப்பிற்காக இராணுவமே வருகிறது என்றால் பாருங்களேன். அப்படி அங்கு என்ன தவறு நடந்தது, அந்த ஊர் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததா, என்பதை காமெடியாக சொல்லியிருக்காங்க.

அருள்நிதி, தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார். ஆனால் அதுவே தொடர் கதையாகிவிட்டால், நாளைக்கு ஹீரோ லிஸ்ட்டில் இருந்து ரசிகர்கள் தூக்கிடுவாங்க, என்பதை புரிந்துக்கொண்டு அடுத்தடுத்த படத்திலாவது, ஹீரோவாகவும் நல்ல படமாகவும் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

போலீஸ் கெட்டப்பில் பொருத்தமாக இருக்கும் அருள்நிதி, நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் பணிபுரிந்திருக்கிறார்.

நாயகி ரம்யா நம்பீசனுக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஒரே ஒரு பாடல் காட்சி, அதுவும் பிளாக் அண்ட்  ஒயிட் எபெக்ட்டில்.

படத்தில் ஹீரோவைக் காட்டிலும் சிங்கம் புலி தான், ஸ்கோர் செய்கிறார். அதிக காட்சிகள், காமெடி என்று அசத்தியிருக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், படத்தில் அசத்திய பகவதி பெருமாள், ராஜ்குமார் இருவரும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பி.ஆர்.ராஜனின்  இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஆங்கிலப் படம் ஒன்றின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று, இப்படத்தின் தயாரிப்பாளரே சொல்லிவிட்டார். தழுவலாக இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா , ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் சொல்லிய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் காமெடியாக சொல்லியிருப்பதால், குறைகளைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.

VSOP Today Poster!!!

29th of July 2015
சென்னை:Tags : VSOP Movie New Posters, VSOP Film Banner images, VSOP Latest Poster, VSOP Movie Wallpaper Pictures, VSOP New Movie Stills Gallery

Tuesday, July 28, 2015

தமிழ் சினிமாவின் ஹீரோ - வில்லன் பார்முலாவை மாற்றிய ஜெயம் ராஜா!!!

28th of July 2015
சென்னை:விஜயை வைத்து 'வேலாயுதம்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ராஜா, சுமார் 3 ஆண்டுகளுக்குப்  பிறகு தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார்'.

தனி ஒருவன்' என்ற  அதிரடி ஆக்ஷன் படத்தோட களத்தில் இறங்கியுள்ள ராஜாவுக்கு, இந்த முறையும் ஒரு ஹீரோவாக தோல் கொடுத்திருப்பது அவருடைய தம்பி ஜெயம் ரவி.

தம்பியுடன், என்ன தான் தொடர்ந்து பணிபுரிந்தாலும், நான் உருவாக்கியுள்ள இந்த 'தனி ஒருவன்' என்ற படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கு அவரே சரியானவர் என்று தோன்றியது. மேலும், இதுவரை ரவி போலீஸ் வேடத்தில் நடிக்காததால் அதுவும் எனக்கு பிளாஸாக அமைந்தது, என்று கூறிய இயக்குனர் மோகன் ராஜா (இனி அவர் பயர் மோகன் ராஜா), காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும்  ஹீரோ - வில்லன் பார்முலாவை உடைத்திருக்கிறாராம்.

பொதுவாக தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் ஹீரோவின் வாழ்வில் வில்லன் குறுக்கிடுவான். பிறகு அதே ஹீரோவால் தோற்றுப்போவான். இது தான் கோடம்பாக்கத்தின் பார்முலா. ஆனால், இதை மாற்றும் விதத்தில், ஹீரோவே வில்லனைத் தேடி சென்று அழிக்கிறார். இது தான் படத்தின் கருவும் கூட, என்று தெரிவித்த ராஜா, ஒரு கெட்டவன் நல்லவனுடைய வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்திய பிறகு தான் அவனை அழிக்க வேண்டுமா, ஏன் அவன் தான் கெட்டவாச்சே அவனுக்காக எதற்கு காத்திருக்க வேண்டும், அவனை தேடி போய் நல்லவன் அழித்தால் என்ன?, என்பது தான் இந்த கதையின் மையம், இதற்காக மூன்று வருடங்களாக நானாக நானில்லாமல் உழைத்திருக்கிறேன், என்று அனல் தெறிக்க  தெரிவித்தார்.

ஹீரோ வேடம் சரி, வில்லன் எப்படி? என்றால், இந்த படத்திற்கு சரியான 28th of வில்லன் என்று அரவிந்தசாமியை தேர்வு செய்த பிறகு, நானும் ரவியும் ஒன்றாக சென்று அவர் கிட்ட கதையை சொன்னோம், கதையை கேட்டவர், இந்த படத்திற்கு நான் தேவை, இந்த படம் எனக்கு தேவை, என்று கூறி உடனே ஒப்புக்கொண்டார். அவருடைய வேடம் ஹீரோவுக்கு இணையாகப் பேசப்படும், என்று தெரிவித்தவர் நயன்தாரா குறித்து பேசுகையில், நயன்தாரா இந்த படத்தில் யுனிபார்ம் இல்லாத ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வருகிறார், அதாவது ஐ.பி.எஸ் பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்ட வேடம். டூயட் , ரொமன்ஸ் என்று இல்லாமல், கதையை நகர்த்தக் கூடிய முக்கியமான வேடம் அவருக்கு.

இதெல்லாம் சரி இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு காலம் என்றதற்கு, ஒவ்வொரு நடிகர்களும் தங்களது சிறப்பான பணியை காண்பிப்பதற்காக நேரம் எடுத்துக்கொண்டார்கள். அரவிந்தாமி சார் இந்த வேடத்திற்காக நான் கொஞ்சம் தயாராகி வருகிறேன், எனக்கு நேரம் கொடுங்கள் என்றார். அதேபோல ரவியின் மற்ற படங்கள் இருந்ததால், அந்த படங்கள் முடியட்டும் என்று இருந்தேன், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்காகவும் கொஞ்சம் தாமதமானது அதனால் தான். ஆனால், இதுவே இப்படத்தின் கதைக்கான பலம் என்றும் சொல்லலாம்.

தாமதாமானாலும், என்னை செல்ல பிள்ளையாக பார்க்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர், படத்தின் டீசரையும், பாடல் காட்சிகளையும் பார்த்து என்னை பாராட்டியதே, எனது முதல் வெற்றி, என்று பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

த்ரிஷாவுக்கு என்ன மாதிரி படங்கள் பிடிக்கும்?!!!

28th of July 2015
சென்னை:மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் ‘அத்தடு’ என்ற ஒரு படத்தில் நடித்தேன். இது முழுக்க முழுக்க காமெடி படம். அந்த படத்திற்கு பிறகு இப்போது முழுக்க முழுக்க காமெடி படமாக அமைதுள்ள ‘ஜெயம்’ ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் சுராஜ் சார் இயக்கத்தில் நடித்துள்ளேன். 

காமெடி படங்களில் நடிப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது மாதிரி மல்டிஸ்டார் படங்கள் என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்! ‘

ஜெயம்’ ரவி, அஞ்சலி, சூரி, பிரபு சார் என ‘சகலகலாவல்லவன்’ ஒரு மல்டி ஸ்டார் படமாக அமைந்துள்ளது. மல்டிஸ்டார் படம் என்றால் படப்பிடிப்பு இடைவேளையில் அரட்டை அடிக்க நிறைய பேர் இருப்பார்கள்! ‘ஜெயம்’ ரவியுடன் நான் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘அத்தடு’ படத்திற்கு பிறகு ஒரு முழுநீள காமெடி படத்தில் நடித்த திருப்தி இப்போது ‘சகலகலாவல்லவன்’ படத்தில் நடித்தபோது கிடைத்துள்ளது.

இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஜாலியான படமாக அமைந்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ‘லட்சுமி மூவி மேக்கார்ஸ்’ நிறுவனத்திற்கு நன்றி’’ என்றார் த்ரிஷா நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சகலகலாவல்லவன்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில்.

உத்தமவில்லன்' நஷ்ட்டத்தை சரிகட்ட லிங்குசாமிக்கு உதவும் கமல்ஹாசன்?!!!

28th of July 2015
சென்னை:நடித்த 'உத்தமவில்லன்' படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தராததால், லிங்குசாமிக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இதனால், பல்வேறு நிகழ்ச்சிகளில் இயக்குனர் லிங்குசாமி, கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், 'உத்தம வில்லன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தூங்காவனம்’ படத்தின் உரிமையை லிங்குசாமிக்கு அளிக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நைட்ஷோ’வுக்கு சூர்யாவின் பாரட்டு!!!

28th of July 2015
சென்னை:மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ஷட்டர்’. இந்த படத்தை தமிழில் ‘’நைட் ஷோ’ என்ற பெயரில் தனது ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை முன்னணி படத் தொகுப்பாளர்களில் ஒருவரான ஆன்டனி இயக்கியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணிபுரிந்த ஆன்டனி இயக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் சத்யராஜ், அனுமோல், யூகி சேது, ஐசரி கணேஷின் மகன் வருண் முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்தது. டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட, சத்யராஜ், இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், ஐசரி கணேஷ் முதலானோர் பெற்றுக் கொண்டனர்.

பிறகு நடிகர் சூர்யா பேசும்போது, ‘‘என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்று கருதப்படும் பெரும்பாலான படங்களுக்கும் எடிட்டர் ஆன்டனி தான்! அந்த படங்களின் வெற்றியில் ஆன்டனிக்கு முக்கிய பங்கு உண்டு! ஆன்டனி இப்போது ’நைட்ஷோ’ படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். ஒரு படத்திற்கு தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைப்பதில் டிரைலருக்கு முக்கிய பங்குண்டு! அந்த வகையில் ஆன்டனி படத்தொகுப்பாளராக பணிபுரியும் படத்தின் டிரைலர்கள் மிரட்டலாக இருக்கும். இந்த படத்தை பொறுத்தவரையில் இயக்குனரும், எடிட்டரும் அவரே என்பதால சொல்ல வேண்டுமா? ‘நைட்ஷோ’ டிரைலர் மிரட்டலாக இருக்கிறது. இதிலிருந்தே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது. 

மலையாளம், மராத்தி மொழிகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த கதை தமிழிலும் மாபெரும் வெற்றி பெறும். ‘காக்கா முட்டை’, ‘பாகுபலி’ என கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெற்றிபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இப்படமும் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும். இந்த படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஏற்கெனவே என்னிடம் இரண்டு கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் தான் அதற்கு இன்னும் நேரத்தை ஒதுக்கவில்லை! இந்த படம் வெற்றிப் படமாக அமைய படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.