.

.

Tuesday, July 28, 2015

தமிழ் சினிமாவின் ஹீரோ - வில்லன் பார்முலாவை மாற்றிய ஜெயம் ராஜா!!!

28th of July 2015
சென்னை:விஜயை வைத்து 'வேலாயுதம்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ராஜா, சுமார் 3 ஆண்டுகளுக்குப்  பிறகு தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார்'.

தனி ஒருவன்' என்ற  அதிரடி ஆக்ஷன் படத்தோட களத்தில் இறங்கியுள்ள ராஜாவுக்கு, இந்த முறையும் ஒரு ஹீரோவாக தோல் கொடுத்திருப்பது அவருடைய தம்பி ஜெயம் ரவி.

தம்பியுடன், என்ன தான் தொடர்ந்து பணிபுரிந்தாலும், நான் உருவாக்கியுள்ள இந்த 'தனி ஒருவன்' என்ற படத்தின் போலீஸ் கதாபாத்திரத்திற்கு அவரே சரியானவர் என்று தோன்றியது. மேலும், இதுவரை ரவி போலீஸ் வேடத்தில் நடிக்காததால் அதுவும் எனக்கு பிளாஸாக அமைந்தது, என்று கூறிய இயக்குனர் மோகன் ராஜா (இனி அவர் பயர் மோகன் ராஜா), காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும்  ஹீரோ - வில்லன் பார்முலாவை உடைத்திருக்கிறாராம்.

பொதுவாக தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் ஹீரோவின் வாழ்வில் வில்லன் குறுக்கிடுவான். பிறகு அதே ஹீரோவால் தோற்றுப்போவான். இது தான் கோடம்பாக்கத்தின் பார்முலா. ஆனால், இதை மாற்றும் விதத்தில், ஹீரோவே வில்லனைத் தேடி சென்று அழிக்கிறார். இது தான் படத்தின் கருவும் கூட, என்று தெரிவித்த ராஜா, ஒரு கெட்டவன் நல்லவனுடைய வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்திய பிறகு தான் அவனை அழிக்க வேண்டுமா, ஏன் அவன் தான் கெட்டவாச்சே அவனுக்காக எதற்கு காத்திருக்க வேண்டும், அவனை தேடி போய் நல்லவன் அழித்தால் என்ன?, என்பது தான் இந்த கதையின் மையம், இதற்காக மூன்று வருடங்களாக நானாக நானில்லாமல் உழைத்திருக்கிறேன், என்று அனல் தெறிக்க  தெரிவித்தார்.

ஹீரோ வேடம் சரி, வில்லன் எப்படி? என்றால், இந்த படத்திற்கு சரியான 28th of வில்லன் என்று அரவிந்தசாமியை தேர்வு செய்த பிறகு, நானும் ரவியும் ஒன்றாக சென்று அவர் கிட்ட கதையை சொன்னோம், கதையை கேட்டவர், இந்த படத்திற்கு நான் தேவை, இந்த படம் எனக்கு தேவை, என்று கூறி உடனே ஒப்புக்கொண்டார். அவருடைய வேடம் ஹீரோவுக்கு இணையாகப் பேசப்படும், என்று தெரிவித்தவர் நயன்தாரா குறித்து பேசுகையில், நயன்தாரா இந்த படத்தில் யுனிபார்ம் இல்லாத ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக வருகிறார், அதாவது ஐ.பி.எஸ் பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்ட வேடம். டூயட் , ரொமன்ஸ் என்று இல்லாமல், கதையை நகர்த்தக் கூடிய முக்கியமான வேடம் அவருக்கு.

இதெல்லாம் சரி இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு காலம் என்றதற்கு, ஒவ்வொரு நடிகர்களும் தங்களது சிறப்பான பணியை காண்பிப்பதற்காக நேரம் எடுத்துக்கொண்டார்கள். அரவிந்தாமி சார் இந்த வேடத்திற்காக நான் கொஞ்சம் தயாராகி வருகிறேன், எனக்கு நேரம் கொடுங்கள் என்றார். அதேபோல ரவியின் மற்ற படங்கள் இருந்ததால், அந்த படங்கள் முடியட்டும் என்று இருந்தேன், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்காகவும் கொஞ்சம் தாமதமானது அதனால் தான். ஆனால், இதுவே இப்படத்தின் கதைக்கான பலம் என்றும் சொல்லலாம்.

தாமதாமானாலும், என்னை செல்ல பிள்ளையாக பார்க்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர், படத்தின் டீசரையும், பாடல் காட்சிகளையும் பார்த்து என்னை பாராட்டியதே, எனது முதல் வெற்றி, என்று பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment