.

.

Monday, November 3, 2014

மீண்டும் ஆஷ்னா சாவேரியுடன் ஜோடி சேரும் சந்தானம்!!!

3rd of November 2014
சென்னை:கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சந்தானம், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஹண்ட் மேட் பிலிம்ஸ்’ என்ற தனது நிறுவனம் மூலம் தயாரித்து ஹீரோவாக நடித்த படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ஆக்‌ஷன், காமெடி, நடனம் என்று முழு ஹீரோயிசத்துடன் சந்தானம் நடித்த இப்படத்தில் ஜோடியாக ஆஷ்னா சாவேரி என்ற புதுமுகம் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், சந்தானம் மீண்டும் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திலும் ஆஷ்னா சாவேரியுடன் ஜோடி சேருகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தை விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாகவும், சந்தானத்திற்கு வாழ்க்கை கொடுத்த நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகிய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சிய இயக்கிய முருகா-ஆனந்த் என்ற இரட்டையர் இயக்குநர்கள் இய
க்குகிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானிடம் பயின்ற சந்தோஷ் தயாநிதி அறிமுகமாகிறார்.

No comments:

Post a Comment