.

.

Friday, October 31, 2014

'கொம்பன்' என்னை மனசுல வச்சு எழுதின கதை - கார்த்தி Komban Movie New Pics!!!

31st of October 2014
சென்னை:Tags : Komban New Movie Photos, Komban Latest Movie Gallery, Komban Unseen Movie Pictures, Komban Film Latest images, Komban Movie Hot Stills, Komban Movie New Pics.

மெட்ராஸ்' படத்தின் வெற்றி கார்த்தியை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சந்தோஷத்தோட அவருடைய அடுத்தப்படமான கொம்பன் படப்பிடிப்பில் படு பரபரப்பாக இயங்கி வரும் அவர், கொம்பன், படத்தைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:

அம்மா மட்டுமே வளர்த்த ஒரு பையன் அப்பா மட்டுமே வளர்த்த ஒரு பொண்ணு, இவங்களுக்கு கல்யாணம் ஆகுது. பொதுவா நம்மாளுங்க மாமனாருக்கு செம லந்து குடுப்போம்ல..."என்ன உங்கப்பன் சாப்ட்டானா? மென்னு திங்க சிரமமா இருக்கும்...கறியை மிக்சில அடிச்சு வெச்சிருக்கலாம்ல! வருஷத்துக்கு ஒரு தடவைதானே குளிப்பாங்க உங்க பரம்பரைல!" அப்படி இப்படின்னு கட்டையைக் குடுப்போம். பொண்ணுங்களும் அதைப் போய்க் கோபத்தோடு ரசிப்பாங்க. அப்படிப் பேசிட்டு இருக்கும்போது மாமனாரே வந்து நின்னார்னா, எப்படி இருக்கும்? தர்மசங்கடமும் அசட்டுச் சிரிப்புமா...நம்ம முகம் களைக்கடும்ல, இப்படி எனக்கும் ராஜ்கிரண் சாருக்கும் படம் முழுக்க ரண்டக்க ரண்டக்கதான்!

கொம்பன் என்னை மனசுல வெச்சு எழுதின கதை. ஆட்டு வியாபாரி கொம்பையா பாண்டியனுக்கு பெத்த அம்மா எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு ஊரும் முக்கியம். ஊருக்குள்ள விசேஷமோ, பஞ்சாயத்தோ...முதல் குரல் கொம்பநோடது தான். ஊருக்கு ஒரு புள்ளை, ஊருக்கான புள்ளை, அப்படி ஒரு கதை.

குட்டிப்புலி பண்ண முத்தையா தான் கொம்பன் இயக்குனர். அவர் ஸ்கிரிப்ட் சொன்னப்பவே ராமனாதபுரத்துக்கும், மதுரைக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்குதான்னு ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, சென்னையில் இருந்து பார்த்தா, தென் தமிழ்நாடு முழுக்க மதுரை மாதிரிதான் தெரியும் நமக்கு. ஆனா, கலாசாரம், வட்டார வழக்கனு மதுரைக்கும் ராமனாதபுரத்துக்கும் ஊருபட்ட வித்தியாசங்கள். கும்மியமா படத்தில் ரொம்ப நல்லவனா நடிக்க வேண்டிய கேரக்டர். சரக்கு, சைட்டிஷ்னே நடிச்சுட்டு இருதுட்டேன். ஆனா, இந்தப் படத்தில் அப்படி எந்த நெகட்டிவ் சேறும் இருக்காது.

கிராமம், குடும்பம், உறவுகளுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைன்னு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். நிறைய அன்போடு அந்நியாயமாக இருக்கிற மாமனார் - மருமகன் உறவுதான் மெயின் கதை. பொதுவா மாமனார் - மருமகன் இடையிலான பாச நேசம், தமிழ் சினிமாவில் பெருசா பேசப்பட்டது இல்லை. இத்தனைக்கும் அவங்க ரொம்பப் பாசமா இருப்பாங்க. ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் அவங்களுக்குள் இருக்கும். அந்த அன்பையும் மரியாதையையும் ரொம்ப இயல்பா கொண்டு வந்திருக்கோம். சிலர் கிட்ட நல்ல கதை இருக்கும். ஆனா, அதை அவங்க எப்படி எடுப்பாங்கன்னு நமக்குப் பயமா இருக்கும். முத்தையாகிட்ட நல்ல கதைகளும் இருக்கு, அதை அச்சு அசலா அப்படியே பிரசன்ட் பண்றார். அதுதான் இந்த சப்ஜெக்ட்டின் பலம்.

நான், என் ராசாவின் மனசிலே படம் பார்த்துட்டு ராஜ்கிரண் நேரிலும் அப்படித்தான் இருப்பார்னு மிரண்டுட்டு இருந்தவன். இப்போ அவரே ஸ்பாட்ல என்னைப் பார்த்து, உங்களுக்கு இந்தக் கிராமத்து கேரக்டர்லாம் நல்லா பொருந்துது தம்பின்னு சொல்றார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்னு ஒரு சினிமாவின் மொத்த பயணத்தையும் புரிச்சு வெச்சிருக்கிறவர் கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள், அவ்வளோ சந்தோஷம் கொடுத்துச்சு.

படத்தில் லட்சுமி மேனன் கேரட்கர் பெயர் பழனி. இந்த இடத்தில் ஒரு பார்வை பாத்தாலே போதும்னு சொன்னா, கரெக்டா புரிச்சிக்கிட்டு செம ஷார்ப்பா பண்ணிடுறாங்க. அவங்க இடத்தில் வெற யார் நடிச்சிருந்தாலும் இது சினிமான்னு ஞாபகம் வந்திருக்குமோன்னு தோணுது. அவ்வளவு நல்லா பெர்ஃபாரம்  பண்ணியிருக்காங்க.

No comments:

Post a Comment