.

.

Monday, August 3, 2015

என் வெற்றிக்கு பின்னால்…? - விஜய் நெகிழ்ச்சி!!!

3rd of August 2015
சென்னை:விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சுதீப், நந்திதா, தம்பி ராமையா, பிரபு முதலானோர் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியிருக்கும் ‘புலி’ படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை சென்னை மகாபலிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அப்போது விஜய் பேசும்போது,

‘‘ரொம்ப நாளா ஒரு சரித்திர ப
டத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. அதே நேரத்துல அதுல கமர்ஷியல் எலிமென்டஸும் இருக்கணும்னு நினைப்பேன். அது இந்த ‘புலி’ படத்துல நிறைவேறியிருக்கு! இப்படத்துல எனக்கு ஜோடிகளா இரண்டு பெண் புலிகள் நடிச்சிருக்காங்க. ஒருவர் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று நிரூபிச்சிட்டிருக்கிற ஸ்ருதி ஹாசன். இன்னொருத்தர் மும்பை நமக்கு கொடுத்திருக்கிற ‘இரண்டாவது குஷ்பு’ ஹன்சிகா. அத்துடன் இப்படத்துல முக்கியமான ஒரு கேரக்டர்ல தனது அழகாலும், நடிப்பாலும் இந்தியாவையே கட்டிப்போட்ட ‘சிவகாசி மதாப்பு’ ஸ்ரீதேவி மேடம், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் மற்றும் பிரபு சார், தம்பி ராமையா சார், நந்திதா என பலர் நடிச்சிருக்காங்க.

’23-ஆம் புலி கேசி’ படத்துல நம்ம எல்லாரையும் ரசிக்க வைத்த, சிந்திக்க வைத்த சிம்புதேவன் தான் ‘புலி’ படத்தை கையாண்டிருக்கிறார். மும்பைல ஒளிப்பதிவாளரா இருக்கிறவர் ‘நட்டி’ நட்ராஜ் சார். அவர் ‘சதுரங்க வேட்டை’ எல்லாம் ஆடினாரு. இதுல ‘புலி வேட்டை’ ஆடியிருக்கிறார். இப்படத்தின் இசைக்கு டி.ஸ்.பி., பாட்டுக்கு வைரமுத்து சார், கலை இயக்கத்துக்கு முத்துராஜ் சார், கிராஃபிக்ஸுக்கு கமலகண்ணன் சார் என பெரிய கூட்டணி அமைஞ்சிருக்கு இந்த ‘புலி’ படத்துல!

வழக்கமாக பரீட்சைக்கு எழுதுகிறவங்க நிறைய பேர் இருப்பாங்க. மார்க் போடுறவங்க கம்மியா இருப்பாங்க. ஆனால் இப்போது பரீட்சை எழுதுறவங்க கம்மியாவும், மார்க் போடுறவங்க அதிகமாகவும் இருக்காங்க. ‘புலி’க்கு எத்தனை மார்க் என்பது பரீட்சை எழுதியிருக்கிற நாங்க சொல்லக் கூடாது! மார்க் போடுற நீங்கதான் (ரசிகர்கள்) சொல்லணும். பாட்டை கேட்டு சொல்லுங்க, படத்தை தியேட்டர்ல பார்த்துட்டு சொல்லுங்க.

தயாரிப்பாளர்கள் கடன் எல்லாம் வாங்கி படம் தயாரிக்கிறாங்க. எத்தனை யோ பேர் அதுல உழைப்பு போடுறாங்க. ஆனால் எத்தனையோ பேர் எதுவும் போடாமல், படத்தை ஃபோன்ல் படம் பிடிச்சு நெட்டுல போட்டு எங்களோட பொழப்புல மண்ணை அள்ளிப் போடுறாங்க. இப்பல்லாம் ஒரு படத்துக்கு நிறைய ப்ளான் பண்ண வேண்டியதா இருக்கு. அதான் சொல்றாங்களே… மோஷன் மோஸ்டர், ஃபஸ்ட் லுக், செகன்ட் லுக், டீசர் அப்படின்னு…! முன்ன எல்லாம் ஒரு டிரைலர் வெளியிடுவாங்க! அதோடு சரி! சரி, அதை விடுங்க! இப்படியெல்லாம் ப்ளான் பண்ணி ஒரு படத்தை எடுத்தா யாரோ ஒருவர் திருட்டுத்தனமாக அதை ஃபோன்ல எடுத்து… அப்படி ஒரு பொழப்பு நடத்துறாங்க! அதுல என்ன சந்தோஷம், என்ன சாதிக்கிறாங்கன்னு தெரியல. . இதை எனக்காக, என் படத்துக்காக மட்டும் நான் சொல்லலை! எல்லா ஹீரோக்களுக்காகவும் தான் சொல்றேன். இந்த செயலை எப்படி எடுத்துக்கலாம் என்றால் வயித்துல ஆரோக்கியமா வளர்ற ஒரு குழந்தையை, சுகபிரசவம் ஆக வேண்டிய ஒரு குழந்தையை சிசேரியன் பண்ணி சாகடிக்கிற மாதிரி! என்ன பண்றது?

எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்க தெரியும், ஆனா பொய்யா ஒருத்தரை நேசிக்க தெரியாது. நமக்கு பின்னாடி பேசுறவங்களை பற்றி நினைக்கவே கூடாது. அவங்களை நாம் எப்படி இரண்டு அடி தாண்டி போகணும்னு தான் நினைக்கணும். என்னோட ஆரம்ப காலத்துல நான் எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கேன். அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டிருந்தால் நான் இன்று உங்களுக்கு முன்னாடி இருந்திருக்க மாட்டேன். எப்போதும் எல்லோரும் சொல்வாங்க என்னோட வெற்றிகு பின்னாடி ஒரு ஆண் இருந்தாங்க, இல்லை ஒரு பெண் இருந்தாங்கன்னு! ஆனா என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அபமானங்கள் தான் இருந்திருக்கு! அதை நான் என்னை வேகப்படுத்திக்கிற மெஷினாகவோ, எரிக்கிற பெட்ரோலாகவோ எடுத்துக்கலை. அப்படி எடுத்திருந்தா இப்போது உங்க முன்னாடி இப்படி நான் நின்னு பேசியிருக்க மாட்டேன்.

இந்த வாழ்க்கை அடுத்தது என்ன என்று தெரியாத வாழ்க்கை! அதனால் முடிஞ்ச வரையில எல்லோரையும் சந்தோஷப்படுத்த பாருங்கள். இந்த வாழ்க்கை அரத்தமுள்ளதாக இருக்கணும். இந்த வாழ்க்கை கொடுத்த ஆண்டவனுக்கும் என்னுடைய ரசிக பெருமக்களுக்கும் நன்றி, வணக்கம்’’ என்றார்.

No comments:

Post a Comment