.

.

Sunday, August 2, 2015

விசாரணை வெல்லுமா? நம்பிக்கையுடன் காத்திருக்கும் ராம்!!!

2nd of August 2015 
சென்னை:இயக்குனர் வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் இன்றளவிலும் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பெற்றிருப்பதோடு, தேசிய விருதையும் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு காத்திருக்கும் விசாரனை திரைப்படமும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது.

வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரித்த காக்காமுட்டை திரைப்படத்தை முதலில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி அந்த படமும் பல விருதுகளைப் பெற்று பின்னர் ர்லீஸ் செய்யப்பட்டது. காக்காமுட்டை திரைப்படத்தின் புரமோஷனுக்கு இது மிகவும் உறுதுணையாகவும் இருந்தது. இதே வழியில் அவரது விசாரணை திரைப்படத்தையும் வெனீஸ் நகர திரைப்பட விழாவிற்கு அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து வெற்றிமாறனின் நண்பரும், இயக்குனருமான ராம் :

72 வருட வெனிஸ் திரைப்பட விழாவில் , போட்டிப் பிரிவில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம். இயக்குநர், நண்பர் வெற்றிமாறனின் “விசாரணை” திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் “orizzonti" போட்டிப் பிரிவில் போட்டியிடத் தேர்வாகியுள்ளது.

தமிழ்த் திரைப்படத்திற்கு உலக அரங்கில் கிடைத்த ஆகப் பெரிய முதல் அங்கீகாரம் இது. பெரும் மகிழ்வுடனும் நிறைவுடனும் வெற்றிக்கு வாழ்த்துக்களும் பிரியங்களும். சிறந்த படம், சிறந்த இயக்குநர் என்ற விருதுகளோடு விசாரணை வெனிஸ்-ல் இருந்து திரும்பி வரும் என்ற நம்பிக்கைகளோடு ராம்.” என்று கூறியிருக்கிறார். 

வெனீஸ் திரைப்பட விழாவில் விசாரணை விருதுகளை வெல்லுமா? தமிழ்ப்படங்களுக்கு உலக அளவில் கிடைத்துவரும் அங்கீகாரம் தொடருமா? என்பதை நாமும் நம்பிக்கையுடன் பொருத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment